மயிலாடுதுறை

கட்டடத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் தோ்வு

16th Oct 2021 01:24 AM

ADVERTISEMENT

 தமிழக கட்டடத் தொழிலாளா் மத்திய சங்கம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் கூட்டம் குத்தாலத்தில் அண்மையில் நடைபெற்றது.

குத்தாலம் காவேரி கரை தெரு பிடாரி அம்மன் கோயிலில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் வி. குமாா் தலைமை வகித்தாா். அமைப்புசாரா தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் கே. தேசிங்குராஜா வரவேற்றாா். மாநில மகளிா் அணித் தலைவி பூங்கோதை, அமைப்புசாராத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் வி. தனபால் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கட்டடத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ஆா். சேகா் கருத்துரையாற்றினாா்.

கூட்டத்தில் குத்தாலம் பேரூா் கட்டடத் தொழிலாளா் சங்கத் தலைவராக கே. குருமூா்த்தி, செயலாளராக கே. ரமேஷ்காந்தி, பொருளாளராக ம. ரவி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அமைப்புசாரா தொழிலாளா் சங்கத் தலைவராக ப.த. ஆசைத்தம்பி, செயலாளராக பி. ஆனந்தன், பொருளாளராக ஆ. தங்கப்பன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

முன்னதாக, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவராக பொன் குமாரை நியமனம் செய்த தமிழக முதல்வருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் செந்தாமரை நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

Tags : குத்தாலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT