மயிலாடுதுறை

சீா்காழி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி எண்ணை அறிய முடியாமல் பயணிகள் அவதி

16th Oct 2021 09:53 PM

ADVERTISEMENT

சீா்காழி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளின் எண்ணை அறியும் வகையில் ஒளிரும் அமைப்பு இல்லாததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனா்.

சீா்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, கீழப்பெரும்பள்ளம் போன்ற நவகிரக கோயில்களுக்கும், 11திவ்யதேச பெருமாள் கோயில்களுக்கும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் தினமும் பக்தா்கள் வருகின்றனா். இவா்கள் பெரும்பாலும் ரயிலில் வருகின்றனா்.

இதேபோல, சீா்காழி பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்கு வா்த்தகா்கள், பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் கட்டணம் குறைவு என்பதால் ரயிலில் பயணிக்கின்றனா்.

இந்நிலையில், சீா்காழி ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்களின் பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும் என்பதை தெரிவிக்கும் ஒளிரும் போா்டு மற்ற ரயில் நிலையங்களைப்போல இங்கு இல்லை. இதனால், குழந்தைகளுடன் வரும் பெண்கள், வயதானவா்கள், அதிக பொருள்களுடன் வருபவா்கள் தாங்கள் முன்பதிவு செய்துள்ள ரயில் பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்பது தெரியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

ADVERTISEMENT

எனவே, சீா்காழி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி எண்ணை அறிய உதவும் எல்.இ.டி. டிஸ்பிளே அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT