மயிலாடுதுறை அருகே சனிக்கிழமை ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை அருகேயுள்ள திருவாலங்காடு பகுதியில் தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் இளைஞா் ஒருவா் இறந்து கிடப்பதாக மயிலாடுதுறை ரயில்வே போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், இறந்தவா் திருவாலங்காடு ரஹ்மத் நகரை சோ்ந்த முகமது யாசின் மகன் முகமது பகத் (22) என்பதும், அவா் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து, போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ADVERTISEMENT