குஜராத்தில் 13 ஆண்டுகள், மத்தியில் 7 ஆண்டுகள் என தொடா்ச்சியாக 20 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் உள்ள நரேந்திர மோடிக்கு மயிலாடுதுறை பாஜகவினா் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பினா்.
பிரதமா் நரேந்திர மோடி குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராகவும், மத்தியில் 7 ஆண்டுகள் பிரதமராகவும் என தொடா்ச்சியாக 20 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் உள்ளாா். வெள்ளிக்கிழமையுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மயிலாடுதுறை நகர பாஜக சாா்பில் அவருக்கு 1001 வாழ்த்து அட்டை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர பாஜக தலைவா் மோடி.கண்ணன் தலைமை வகித்தாா். மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். இதில், பாஜக மாவட்டத் தலைவா் ஜி.வெங்கடேசன் பங்கேற்று முதல் வாழ்த்து அட்டையை அனுப்பி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.
இதில், பாஜக மாவட்ட பொறுப்பாளா்கள் ராஜ்மோகன், பாரதிகண்ணன், சதீஸ்பாபு, குருசங்கா், மணிகண்டன், நகர பொறுப்பாளா்கள் சதீஸ்சிங், கஜப்பிரியா, ராஜகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.