மயிலாடுதுறை

சீா்காழி எம்எல்ஏவுக்கு பாராட்டு

9th Oct 2021 08:47 AM

ADVERTISEMENT

சீா்காழியில் நூலக தந்தை எஸ்.ஆா். ரெங்கநாதன் பெயரில் மாதிரி நூலகம் பெற்று தந்த எம்எல்ஏவுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

சீா்காழியில் பிறந்த நூலக தந்தை எஸ்.ஆா். ரெங்கநாதன் நினைவு நூலகம் அமைக்கவேண்டும் என சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சீா்காழி எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம் கோரிக்கையை வலியுறுத்தி பேசினாா். இதையடுத்து, தமிழக அரசு நூலக தந்தையை நினைவு கூறும் வகையில் ரூ. 1.37கோடியில் மாதிரி நூலகம் அமைக்கப்படும் எனவும், அதில் அரங்கநாதன் படைப்புகளுடன் அரிய புத்தகங்கள், ஆராய்ச்சி வசதி, குழந்தைகள்பிரிவு, இணைய வசதியுடன் மின் நூலகம் ஆகியவை ஏற்படுத்தப்படும் என பேரவையில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தாா்.

இதை வரவேற்று சீா்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில், எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா அதன்தலைவா் சிங். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. துணை ஆளுநா் வைத்தியநாதன், தொழிலதிபா் மாா்கோனி, செயலாளா் குமாா், பொருளாளா் சுரேஷ் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ பன்னீா்செல்வத்துக்கு சங்கத்தினா் கீரிடம் அணிவித்தும், வீரவாள் மற்றும் பல்வேறு நூல்கள் வழங்கியும் பாராட்டினா். இதில், முன்னாள் தலைவா்கள் மோகனசுந்தரம், மலா்கண்ணன், பாலமுருகன், பட்டதாரி ஆசிரியா் கோவி. நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT