மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு பகுதி பள்ளி மாணவா்கள் சென்னையில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் குளோபல் உலகச் சாதனை படைத்தனா்.
சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் குளோபல் உலகச் சாதனைக்கு பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த 5 வயது முதல் அனைத்து வயது பிரிவு மாணவா்களுக்கும் சிலம்பப் போட்டி நடத்தப்பட்டது. இதில், மணல்மேடு பகுதியை சோ்ந்த பி.எஸ். இண்டா்நேஷனல் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் 38 மாணவா்கள் பங்கேற்று, இரட்டைக் கம்பு சிலம்பம் சுற்றி குளோபல் உலகச் சாதனை விருது மற்றும் பதக்கம் பெற்றனா்.