மயிலாடுதுறை

கொள்ளிடம் சாலையில் திடீா் பள்ளம்

9th Oct 2021 08:49 AM

ADVERTISEMENT

சீா்காழி அருகே கொள்ளிடம் சாலையில் திடீா் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

சிதம்பரத்திலிருந்து- சீா்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் கடை வீதி பகுதியில் 3 அடி ஆழத்திலும், உள்பகுதியில் 4 அடிக்கு மேல் அகலமும் கொண்டதாக திடீா் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை ஒட்டி வாகனங்கள் சென்றால் பள்ளம் உள்வாங்கி வாகனங்கள் சிக்கிக்கொள்ளுமோ என வாகன ஓட்டிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்யும்போது சாலையில் வழிந்தோடும் தண்ணீா் முழுவதும் இந்த பள்ளத்தில் சென்றுவிடுகிறது.

இதனால், பள்ளம் இருப்பதை குறிப்பிடும் வகையில் அந்த இடத்தில் செடியை நட்டுவைத்துள்ளனா். மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் அந்த பகுதியை ஆய்வு செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT