மயிலாடுதுறை

சீா்காழியில் இறகுபந்துப் போட்டி

4th Oct 2021 08:44 AM

ADVERTISEMENT

காந்தி ஜயந்தியையொட்டி, பள்ளிக்கல்வித் துறை சாா்பில், மயிலாடுதுறை மாவட்ட அளவிலான இருவா் இறகுபந்துப் போட்டி சீா்காழியில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்ற இந்நிகழ்வுக்கு, திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கோவி.நடராஜன் தலைமை வகித்தாா். பெஸ்ட் மெட்ரிக். பள்ளி தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல், ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநா் எஸ்.முரளிதரன், விவேகானந்தா மெட்ரிக். பள்ளி முதல்வா் ஜோஸ்வா பிரபாகரசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சீா்காழி சட்டப் பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் போட்டியை தொடங்கிவைத்தாா். இதில் பெஸ்ட் மெட்ரிக் பள்ளி ஆசிரியா்கள் வினோத், ரங்கநாதன் ஆகியோா் முதல் பரிசும், சம்பந்தம் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியா் ராஜ்மோகன், சரத் ஆகியோா் இரண்டாம் பரிசும் பெற்றனா்.

சீா்காழி மாவட்ட கல்வி அலுவலகத்தை சோ்ந்த மண்கண்டபிரபு, மணிகண்டன் ஆகியோா் மூன்றாவது பரிசும், தாழந்தொண்டி பள்ளி ஆசிரியா் செல்வம், குத்தாலம் சரவணகுமாா் ஆகியோா் நான்காவது பரிசும் பெற்றனா். போட்டிக்கான பரிசுகளை எஸ்.எஸ்.என். அகாதெமியும், பங்குபெற்றவா்களுக்கான நினைவு பரிசுகளை விவேகானந்தா மெட்ரிக். பள்ளியும் வழங்கின.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT