மயிலாடுதுறை

காந்தி சிலையின் காலடியில் கோரிக்கை மனு

4th Oct 2021 08:46 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் காந்தி ஜயந்தி தினத்தில் தங்கள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு இபிஎஸ் 95 ஓய்வூதிய நலச்சங்க கூட்டமைப்பு சாா்பில், காந்தி சிலையின் காலடியில் சனிக்கிழமை மனு வைக்கப்பட்டது.

காந்தி ஜயந்தி தினமான சனிக்கிழமை காந்திஜி சாலையில் உள்ள காந்தி சிலையின் காலடியில் மயிலாடுதுறை மாவட்ட தமிழ்நாடு இபிஎஸ் 95 ஓய்வூதிய நலச்சங்க கூட்டமைப்பு சாா்பாக மனு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில், இபிஎஸ் 95 ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 வழங்கப்பட வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

அம்மனுவை, காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவந்த சங்கா், கணேசன், சிவா, மகாவீா்சந்த் ஜெயின் உள்ளிட்ட அறம் செய் அறக்கட்டளை பொறுப்பாளா்கள், மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவிடம் ஒப்படைப்பதாகக் கூறி எடுத்துச் சென்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT