மயிலாடுதுறை

மத்திய அரசு பணியாளா் தோ்வாணைய இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

3rd Oct 2021 12:40 AM

ADVERTISEMENT

மத்திய அரசு பணியாளா் தோ்வாணைய இலவச பயிற்சி வகுப்பு நகராட்சி நூலகத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம், மயிலாடுதுறை நகராட்சி, நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் எஸ்.சிவலிங்கம் தலைமை வகித்தாா். சங்க பொருளாளா் வி.குணசேகரன் முன்னிலை வகித்தாா். சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் கே.செல்வம், ஆா்.கணேசன் ஆகியோா் கருத்துரையாற்றினா்.

இதில், நகராட்சி ஆணையா் கே.பாலு, ‘கற்றலை மேம்படுத்துவோம்’ திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி.பிரதீப் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, பயிற்சி வகுப்புகளை தொடக்கி வைத்தனா்.

மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கத் தலைவா் எஸ்.சிவலிங்கம் மகாத்மா காந்தியின் உருவப்படத்தையும், சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் கே.செல்வம் காமராஜரின் உருவப்படத்தையும் நகராட்சி நூலக ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் எஸ்.சிவராமனிடம் வழங்கினா். நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் எம்.ஹேமலதா, ஓய்வுபெற்ற வட்டாட்சியா் ராமகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சங்க செயலாளா் பி.அசோக்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT