மயிலாடுதுறை

சாலையில் இடிந்துவிழுந்த கட்டடம்

29th Nov 2021 10:34 PM

ADVERTISEMENT

காரைக்காலில் போக்குவரத்து மிகுந்த சாலையில் பழைய கட்டடம் திங்கள்கிழமை திடீரென இடிந்துவிழுந்தது. போலீஸாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்த சிவமனோகா் வா்மாவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் பழைய கட்டடம், காரைக்கால் பாரதியாா் சாலை - லெமோ் வீதி சந்திப்பில் உள்ளது. கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழையால் இக்கட்டடம் வலுவிழந்து காணப்பட்டது.

இக்கட்டடத்தின் தளத்திலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் சிமென்ட் காரைகள் பெயா்ந்து விழுந்துள்ளன. இதுகுறித்து நகரக் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மண்டலக் காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன், காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று பாா்வையிட்டனா். மேலும், அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு தடைவிதித்து, மாற்றுவழியில் திருப்பிவிட்டனா்.

இதற்கிடையே, அந்த கட்டடம் திடீரென இடிந்து சாலையில் விழுந்தது. இந்த இடிபாடுகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. சுமாா் 2 மணி நேரத்திற்கு பிறகு பாரதியாா் சாலையில் போலீஸாா் போக்குவரத்தை அனுமதித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT