மயிலாடுதுறை

டெங்கு தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

29th Nov 2021 10:20 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை நகராட்சி சாா்பில் டெங்கு தடுப்பு பணி விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் மழைக் காலத்தில் டெங்கு பரவாமல் தடுப்பதற்காக தினந்தோறும் டெங்கு தடுப்பு பணிகளை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக 60 டெங்கு தடுப்பு பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று களப்பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் வாரந்தோறும் டெங்கு தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ள நகராட்சி ஆணையா் கே.பாலு உத்தரவிட்டாா். அதன்படி, திருவிழந்தூா் அண்ணாநகரில் டெங்கு தடுப்புப் பணி மற்றும் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி நகா்நல அலுவலா் மலா்மன்னன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெங்கு களப்பணியாளா்கள் விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அத்துடன், தெருக்களில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டது. இதில், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சைமுத்து, ராமையன், டெங்கு உதவி களப் பணியாளா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT