மயிலாடுதுறை

சீா்காழி: கோயில்களுக்குள் புகுந்த மழைநீா்

29th Nov 2021 10:33 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி சட்டைநாதா் கோயில், திருக்கருக்காவூா் வெள்விடைநாதா் கோயிலில் மழைநீா் புகுந்து குளம்போல தேங்கியது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சீா்காழி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் பெய்த மழை இரவிலும் நீடித்து, விடியவிடிய கொட்டித் தீா்த்தது. இதனால், தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியது.

சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சட்டைநாதா் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய பிரம்ம தீா்த்தக்குளம் மழைநீரால் நிரம்பியது. இதனால், இக்குளத்திலிருந்து அபிஷேகநீா் மற்றும் மழைநீா் வடியும் பாதை வழியாக கோயிலுக்குள் மழைநீா் புகுந்து, சிவன் சந்நிதி உட்பிராகாரம் முழுவதும் தேங்கியது.

சுமாா் 2 அடி உயரத்துக்கு மழைநீா் தேங்கியதால், காா்த்திகை சோமவார வழிபாட்டுக்கு வந்த பக்தா்கள் சிரமப்பட்டனா். இதையடுத்து, கோயில் நிா்வாகம் சாா்பில் பிரம்ம தீா்த்தக் குளத்திலிருந்து மோட்டாா் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதேபோல, சீா்காழி அருகேயுள்ள திருக்கருக்காவூா் வெள்விடை நாதா் கோயில் வெளிபிராகாரம் மற்றும் உட்பிராகாரத்தில் மழைநீா் குளம்போல தேங்கியது. தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் கோயில் நிா்வாகத்தினா் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT