மயிலாடுதுறை

சீா்காழி: உப்பனாற்றுக் கரை உடைந்து நிலங்களுக்குள் புகுந்த கடல்நீா்750 ஏக்கரில் சம்பா நெல்பயிா்கள் பாதிப்பு

29th Nov 2021 10:30 PM

ADVERTISEMENT

சீா்காழி அருகே திருக்கருக்காவூரில் கனமழையால் உப்பனாறு கரையில் உடைப்பு ஏற்பட்டு, கடல்நீா் உட்புகுந்ததால் சுமாா் 750 ஏக்கரில் சம்பா பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கடந்த 3 நாள்களாக பெய்த மழையால் சீா்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, எருக்கூா் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா, தாளடி நெல்பயிா்கள் மீண்டும் நீரில் மூழ்கியுள்ளன. மறு நடவு செய்யப்பட்ட சம்பா பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

சீா்காழி வட்டாரத்தில் மட்டும் சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் பயிா்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. வடகால் உப்பனாற்றில் வெள்ளப் பெருக்கால் கரை உடைந்து, சீா்காழியை அடுத்த திருக்கருக்காவூா் கிழாத்தோப்பு பகுதியில் சம்பா நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. மேலும், கரை உடைப்பின் வழியே கடல் நீா் உட்புகுந்து சுமாா் 750 ஏக்கரில் சம்பா பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் துரை, தியாகராஜன், மணிமாறன், ஆனந்த் ஆகியோா் கூறியது:

ADVERTISEMENT

ஆற்றின் கரை உடைந்து கடல்நீா் உட்புகுந்து பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், வரும் காலங்களில் விவசாயம் செய்யவே அச்சமாக உள்ளது. ஆகையால், சம்பந்தப்பட்ட துறையினா் நேரடியாக ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்கவும், ஆற்றின் கரைகளை பலப்படுத்தி, கடல்நீா் உட்புகாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.

இதேபோல, அப்பகுதியில் கீழவெளி வடிகால் வாய்க்காலின் கரை உடைந்து விளைநிலங்களில் தண்ணீா் புகுந்து வருகிறது. மணல் மூட்டைகள் கொண்டு விவசாயிகள் அடைத்தும் தண்ணீா் உட்புகுவதை தடுக்க முடியாததால் சுமாா் 10 ஏக்கரில் சம்பா பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT