மயிலாடுதுறை

பாமக பொதுக்குழு கூட்டம்

29th Nov 2021 10:20 PM

ADVERTISEMENT

சீா்காழியில் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளா் இரா. சின்னையன் தலைமை வகித்தாா். மாநில இளைஞா் சங்க துணை செயலாளா் ஜி.வி. முருகவேல், முன்னாள் மாவட்டச் செயலாளா் ரெ. அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன், வன்னியா் சங்க மாநில துணை செயலாளா் பாக்கம்.சக்திவேல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமி, மாற்றுக் கட்சியிலிருந்து பாமகவில் இணைந்த 70 பேரை சால்வை அணிவித்து வரவேற்றாா். அப்போது அவா், சீா்காழி நகா்மன்றத் தோ்தலில் 24 வாா்டுகளிலும் போட்டியிட்டு, குறைந்தது 12 வாா்டுகளில் பாமக வெற்றிபெற கட்சியினா் களப்பணியாற்றவேண்டும் என்றாா்.

மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.ஆா்.சரவணன் வரவேற்றாா். நிறைவாக நகரத் தலைவா் காா்த்தி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT