மயிலாடுதுறை அருகேயுள்ள செறுதியூா் ஊராட்சியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் 250 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், 82 கால்நடைகளுக்கு சிகிச்சை பணி, 108 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், 25 கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் பணி நடைபெற்றது. முகாமை செறுதியூா் ஊராட்சித் தலைவா் மலா்க்கொடி நெடுஞ்செழியன் தொடங்கிவைத்தாா்.
மயிலாடுதுறை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் எம். முத்துக்குமாரசாமி, உதவி மருத்துவா் எஸ். காயத்ரி, கால்நடை ஆய்வாளா் மோகன்ராஜ், கால்நடை பராமரிப்பு உதவியாளா் ஸ்டீபன் மோகன்தாஸ் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தி, தாது உப்பு கலவைகளை வழங்கினா்.