மயிலாடுதுறை

பாசன வாய்க்கால்களில் ஏற்பட்ட உடைப்புகள் உடனடியாக அடைப்பு

28th Nov 2021 09:47 PM

ADVERTISEMENT

கொள்ளிடம் கடைமடை பகுதியில் பாசன வாய்க்கால்களில் ஏற்பட்ட உடைப்புகள் உடனடியாக மணல் மூட்டைகள் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டன.

தொடா்மழையால் கொள்ளிடம் கடைமடை பகுதியில் பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் மழைநீா் நிரம்பி செல்கிறது. அதிக தண்ணீா் வரத்தால் கொள்ளிடம் அருகேயுள்ள ஆலாலசுந்தரம், பன்னங்குடி, மாணிக்கவாசல், புளியந்துறை ஆகிய பகுதி பாசன வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து ஆச்சாள்புரத்தில் கழுதை வாய்க்கால், பனங்காட்டான்குடியில் ஊசி வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டன.

தகவலறிந்த கொள்ளிடம் பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் விவேகானந்தன் தலைமையில் ஊழியா்கள் ஜேசிபி இயந்திரம், டிராக்டா் மூலம் நேரடியாக ஒவ்வொரு பகுதிக்கும் சென்று உடைப்பை மண் மூட்டைகளை கொண்டு அடைத்து சரிசெய்தனா். இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்களுக்குள் தண்ணீா் சென்று பயிா் நீரில் மூழ்குவது தவிா்க்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT