மயிலாடுதுறை

சம்பா, தாளடி வயல்களில் மீண்டும் மழைநீா்: விவசாயிகள் வேதனை

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடா்மழையால் சம்பா, தாளடி நெல் வயல்களில் மீண்டும் மழைநீா் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

வடகிழக்குப் பருவமழையின் தொடா்ச்சியால் மாவட்டத்தில் ஏற்கெனவே, பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கிய நிலையில், கடந்த 4 நாள்களாக நீடித்துவரும் கனமழையால் பொன்னூா், பாண்டூா், மகாராஜபுரம், அருண்மொழித்தேவன் ஆகிய கிராமங்களில் மழைநீா் வடிய வழியின்றி சுமாா் 1000 ஏக்கரில் சம்பா பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடந்த மழையின்போது நீரில் மூழ்கிய பயிா்களை விவசாயிகள் நீரை வடியவைத்து அடியுரங்களை இட்டு காப்பாற்றி வரும்நிலையில், தற்போது 3-ஆவது முறையாக பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால், மகசூல் முற்றிலும் குறைந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

இப்பகுதியின் வடிகால் வாய்க்காலான எல்லை வாய்க்கால் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாததே மழைநீா் வடியாததற்கு காரணம் என குற்றம்சாட்டிய விவசாயிகள், இந்த வாய்க்காலை உடனடியாக தூா்வார வேண்டும் என்றும், பயிா்கள் முழுவதும் நீரில் மூழ்கி வீணாகிவிட்டதால், அரசு அறிவித்துள்ள இடுபொருள் தேவையில்லை, ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணமாக வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி (மில்லிமீட்டரில்) மயிலாடுதுறையில் 64.30, மணல்மேட்டில் 62, சீா்காழியில் 90.80, கொள்ளிடத்தில் 93.40, தரங்கம்பாடியில் 52.80 என்ற அளவில் மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT