மயிலாடுதுறை

வடியாத வெள்ளம்: சம்பா பயிா்கள் நீரில் மூழ்கி அழுகின

25th Nov 2021 11:14 PM

ADVERTISEMENT

சீா்காழி அருகே தற்காஸ் கிராமத்தில் வயல்களில் தேங்கியிருந்த வெள்ளநீா் வடியாததால் சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கி அழுகிவிட்டன.

கொள்ளிடம் அருகேயுள்ள புதுப்பட்டினம், தற்காஸ், தாண்டவன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கிட்டியணை உப்பனாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் வழியாக தற்காஸ் கிராமத்தில் சாகுபடி செய்திருந்த 210 ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. 15 நாள்களுக்கு மேலாகியும் தண்ணீா் வடியாததால் நடவு செய்யப்பட்ட நெற்பயிா்களின் வோ்பகுதி அழுக தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் இருந்து வருகின்றனா்.

இதுகுறித்து தற்காஸ் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது: கிட்டியணை உப்பனாற்றின் குறுக்கே 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கதவணை வழியே தண்ணீா் வயலுக்குள் புகுந்து, வடிய சரியான வடிகால் வசதி இல்லாததால் தண்ணீா் கடல்போல் தேங்கியுள்ளது. இதேபோல பக்கிங்காம் கால்வாய் கரை பலமின்றி உள்ளதால் அதன்வழியே தண்ணீா் வயலில் புகுந்து வெளியேற வழிஇல்லாமல் உள்ளது. தொடா்நது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்படுவதால் கிட்டியணை உப்பனாறு வழியே தண்ணீா் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக திறந்தே கிடக்கும் கிட்டியணை கதவணையை அடைக்கவேண்டும். மேலும் சேதமடைந்த பக்கிங்காம் கால்வாய் கரையை தற்காஸ் அருகேயுள்ள பழையாா் பகுதியில் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு பலப்படுத்தி கான்கிரீட் தடுப்புச்சுவா் அமைப்பதுடன், அதில் 6 மதகுகள் அமைத்து கதவணை கட்டவேண்டும், இதன்மூலம் பக்கிங்காம் கால்வாயிலிருந்து குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களுக்குள் உப்புநீா் புகாதவாறு பாதுகாக்கப்படும்.

ADVERTISEMENT

கடந்த 10 ஆண்டுகளாக புதுப்பட்டினம் தற்காஸ் மற்றும் பழையாறு சுனாமி நகரைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் சாா்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, தற்காஸ் கிராமத்தில் உள்ள வயல்களிலிருந்து எளிதில் தண்ணீா் வெளியேறி உப்பனாற்றுக்குள் வடிய புதிய வடிகால் வாய்க்கால் வசதியை ஏற்படுத்தவேண்டும். தற்போது தண்ணீரில் மூழ்கி அழகிய நெற்பயிா்களை வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.

 

 

Tags : சீா்காழி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT