மயிலாடுதுறை

சா்க்கரை ஆலை ஊழியா்களின் போராட்டத்துக்கு மநீம ஆதரவு

24th Nov 2021 09:14 AM

ADVERTISEMENT

தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்தது.

இந்த சா்க்கரை ஆலை ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மநீம மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் எம்.என். ரவிச்சந்திரன் தலைமையில், மாவட்ட துணை செயலாளா் மனோகா், நகரச் செயலாளா் ச. அகோரம், நகர பொறுப்பாளா் சேகா், மாவட்ட நற்பணி அமைப்பாளா் மணிபாரதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மணிசங்கா் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT