மயிலாடுதுறை

சீர்காழி அருகே கனமழையால் பயிர் பாதிப்பு: மத்திய குழுவினர் ஆய்வு

23rd Nov 2021 01:58 PM

ADVERTISEMENT

சீர்காழி: சீர்காழி பகுதியில் மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம், தரங்கம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரம் முழுவதும் மழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 13,500 ஏக்கர் விளை நிலங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது.

மழை, வெள்ளத்தால் சேதம் ஏற்பட்ட பயிர்களை கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவை சேர்ந்த மத்திய அமைச்சகத்தின் உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான, விஜய்ராஜ்மோகன், ரஞ்சன் சிங், வர பிரசாத் ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர் புத்தூர் பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், பயிர்கள், வீடுகள் குறித்த புகைப்பட புகைப்படங்கள் புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் காட்சிப் படுத்தப் பட்டிருந்தது அதனை மத்திய குழுவினர் பார்வையிட்டு விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

ஆய்வின் போது மத்திய குழுவுடன் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி,மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, எம்.எல் ஏக்கள் பூம்புகார் நிவேதா.முருகன்,சீர்காழி பன்னீர்செல்வம்,மயிலாடுதுறை ராஜகுமார் கோட்டாட்சியர் நாராயணன் தாசில்தார் சண்முகம்  வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, மின்சார வாரியம் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Tags : கனமழை சீர்காழி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT