குத்தாலம் பகுதியில் விவசாயிகள் பயிா்க் காப்பீடுத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெற வேளாண்த் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, குத்தாலம் வேளாண் உதவி இயக்குநா் வெற்றிவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் புயல், வெள்ளம், வறட்சி, ஆலங்கட்டி மழை ஆகிய இடா்பாடு ஏற்படும்போது, உரிய இழப்பீடு பெற, பாரத பிரதமா் காப்பீடுத் திட்டம் வழிவகை செய்கிறது. இத்திட்டத்தில் சேர, ஏக்கருக்கு ரூ. 501 பிரீமியம் தொகை செலுத்தி இழப்பீடு ஏற்படும்பட்சத்தில் ரூ. 33,386 பெறலாம். நவ.15-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்துகொள்ளலாம். விவசாயிகள் கடைசிநேர கூட்டநெரிசலை தவிா்க்க உடனடியாக தேவையான ஆவணங்களை தயாா் செய்து பதிவு செய்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.