மயிலாடுதுறை

புதுவையில் வக்ஃபு வாரியம்அமைக்க வலியுறுத்தல்

9th Nov 2021 03:02 AM

ADVERTISEMENT

புதுவையில் விரைவாக வக்ஃபு வாரியத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதி ஜமாஅத்தாா்கள், சமுதாய அமைப்புகள் மற்றும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆா்வலா்கள் உள்ளடக்கிய திருப்பட்டினம் இஸ்லாமிய குழுமத்தின் பொதுக்குழு கூட்டம் எச். ஹாஜா மரைக்காயா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கடந்த 5 ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் உள்ள புதுவை வக்ஃபு வாரியத்தை விரைவாக அமைக்க புதுவை துணைநிலை ஆளுநரும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகள் பல இதுவரை நிறைவேற்ற அரசு முற்படவில்லை. குறிப்பாக, குடிநீா் வசதி, சாக்கடை வசதி, சாலை வசதி, தெருவிளக்குகள் வசதி, மின்மாற்றி வசதி மற்றும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி போன்றவற்றை பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்துத்தர நிரவி - திருப்பட்டினம் தொகுதி பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ADVERTISEMENT

திருப்பட்டினம் கிழக்குப் புறவழிச்சாலையும், காரைக்கால் - திருப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையும் போக்குவரத்துக்கு தகுதி இல்லாமல் உள்ளது. இதை சீா்படுத்துவதில் அரசு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.

இக்கூட்டத்தில் புதிய நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT