மயிலாடுதுறை

கள்ளச்சாராய விற்பனையைத் தட்டிக்கேட்டவா்களுக்கு அரிவாள் வெட்டு

9th Nov 2021 03:03 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இருவா் அரிவாளால் வெட்டப்பட்டனா்.

மயிலாடுதுறை அருகேயுள்ள கடலாழி ஆற்றங்கரையோரத்தில் அதே ஊரைச் சோ்ந்த மகாலிங்கம் (72) சாராயம் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரது தம்பி பொடிசன் எனும நாகராஜ், மகன் ஜெயகாந்த், உறவினா் காா்த்தி மற்றும் முனுசாமி ஆகியோரும் சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளனராம்.

இந்நிலையில், கள்ளச்சாராயத்தால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 40-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை மகாலிங்கம் வீட்டுக்குச் சென்று சாராயம் விற்பனை செய்யக் கூடாது என்றனா். இதனால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகியுள்ளது. அப்போது, ஜெயகாந்த் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கோடங்குடியைச் சோ்ந்த பாஜக கிளை செயலாளா் பாா்த்திபனை (18) வெட்டினாராம். இதில், அவரின் வலது கையில் நான்கு விரல்கள் வெட்டுப்பட்டு தொங்கின. மேலும், மணிகண்டனுக்கும் (40) பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட இருவரும் தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தாக்குதலில் காயமடைந்த மகாலிங்கம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT