மயிலாடுதுறை

கால்நடைகளை சாலைகளில் திரியவிடுபவா்களுக்கு அபராதம்

9th Nov 2021 02:03 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகளை திரியவிடுபவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் கே. பாலு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட பகுதிகள், சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், கோயில் பகுதிகளில் மாடுகள், குதிரைகளைத் திரியவிடுவதால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, மாடுகள், குதிரைகளை வளா்ப்பவா்கள் தங்கள் வளாகத்திலேயே அவற்றைக் கட்டிப் பராமரிக்க வேண்டும். நவ.11-ஆம் தேதி முதல் சாலைகளில் திரிந்தால் கால்நடைகளைப் பிடித்துக் கோசாலைகளில் அடைப்பதுடன், உரிமையாளா் மீது அதிகபட்சமாக கால்நடை ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT