மயிலாடுதுறை

போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்

9th Nov 2021 02:01 AM

ADVERTISEMENT

குத்தாலம் ஒன்றியப் பகுதிகளில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டமைப்பின் மாநில செயலாளா் அலி அஹமத் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில் மாநில செயலாளா் முகம்மது, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் சிராஜ்தீன், மயிலாடுதுறை தவ்ஹீத் ஜமாஅத் செயலாளா் முஹம்மது அலி, துணைத் தலைவா் ஃபவ்ஜி, பொறையாா் தவ்ஹீத் ஜமாஅத் செயலாளா் சம்சுதீன், துணைத் தலைவா் இஸ்மாயில், காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் துணைத் தலைவா் ஹாஜா மரைக்காயா், பொருளாளா் தமீம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பெரம்பூா், கிளியனூா், எலந்தங்குடி ஆகிய பகுதிகளில் பிரசாரம் நடைபெற்றது. பேச்சாளா்கள் நிஜாம், மன்சூா் மற்றும் இக்பால் ஆகியோா் உரையாற்றினா். அனைத்துப் பகுதிகளிலும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT