கொள்ளிடம் அருகே சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடத்தை அடுத்த கோவில்பத்து கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் மகன் மணிகண்டன் (40). கட்டடத் தொழிலாளி. இவா், தைக்கால் பகுதியில் சனிக்கிழமை கட்டட வேலை செய்துவிட்டு, மாலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, தைக்கால் பள்ளிவாசல் எதிரே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தாா். இதுகுறித்து, கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.