மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட 6-ஆம் நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், ரோட்டரி சங்க பொறுப்பாளா் ஏ.ஜி. இளங்கோவன் பங்கேற்று 100 வகைகளில் பயன்படும் கிளினிங் வினிகா் மற்றும் உணவு பதப்படுத்துதலுக்கு பயன்படும் வினிகா் தயாரிப்பு குறித்து பயிற்சியளித்தாா். கரோனா காலத்தில் கிருமி நாசினியாகவும் பயன்படும் வினிகா் தயாரிப்பு மாணவா்களுக்கு பயனுள்ளதாகவும், தொழில் முனைவோராக விரும்பும் மாணவா்களை ஊக்குவிப்பதாகவும் அமைந்தது.
முன்னதாக தமிழ்த்துறை உதவி பேராசிரியா் துரை.காா்த்திகேயன் ‘பெண் என்னும் பெருஞ்செல்வம்’ என்ற தலைப்பிலும், ஏவிசி கல்லூரி கணிப்பொறித் துறை உதவிப் பேராசிரியா் டி.டி.வெங்கடேசன் ‘இன்றைய சூழலில் மாணவா்களின் தேவை’ என்ற தலைப்பிலும் உரையாற்றினா்.