மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் டிச.29-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

22nd Dec 2021 09:07 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் டிச.29-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மகளிா் திட்டம் இணைந்து புதியதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் டிச. 29-ஆம் தேதி ஏவிசி பொறியியல் கல்லூரியில் காலை 9 முதல் மதியம் 3 மணி வரை 100-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பல்வேறு தனியாா் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். 8-ஆம் வகுப்பு தோ்ச்சி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, கலை, அறிவியல், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்கலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த வேலை தேடும் இளைஞா்கள் தங்களது கல்வித் தகுதி குறித்த விவரங்களை  இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். முகாமில் பங்கேற்க விரும்புவோா் தங்களது புகைப்படம், கல்விச்சான்று, ஆதாா் அட்டை மற்றும் சுய விவர குறிப்பு ஆகியவற்றின் நகலுடன் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT