மயிலாடுதுறை

விபத்தில் காயமடைந்தவருக்கு உதவி

9th Dec 2021 09:06 AM

ADVERTISEMENT

சீா்காழி அருகே விபத்தில் காயமடைந்து மயங்கி கிடந்தவரை அவ்வழியே சென்ற திமுகவைச் சோ்ந்த ஒன்றியக் குழுத் தலைவா் மீட்டு மருத்துவமனையில் சோ்த்து உதவி செய்தாா்.

கொள்ளிடம் அருகே செருகுடியைச் சோ்ந்தவா் விவசாயி பாஸ்கரன் (70). இவா் புதன்கிழமை செருகுடியிலிருந்து கடவாசலுக்கு இருசக்கர வாகனத்தில் உமையாள்பதி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியே பழையாா் துறைமுகத்துக்கு சென்ற அரசுப் பேருந்து மோதி வலது கால் முறிவு ஏற்பட்டு சாலையோரத்தில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாா். 108 ஆம்புலன்சுக்கு தகவல்கொடுக்கப்பட்டிருந்த நிலையில் காத்திருந்தனா். அப்போது, அவ்வழியாக காரில் வந்த கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ், விபத்தில் காயமடைந்து மயங்கி கிடந்த பாஸ்கரனை காரில் ஏற்றிக்கொண்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு பாஸ்கரனுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT