மயிலாடுதுறை

காப்பீடு, விவசாயக் கடன் வழங்குவதில் முறைகேட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

9th Dec 2021 09:05 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை அருகேயுள்ள கடலங்குடி, திருச்சிற்றம்பலம் கிராமங்களில் பயிா்க் காப்பீடு, விவசாயக் கடன் பெற சிட்டா, அடங்கல் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்து சிபிஎம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலங்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைச் செயலாளா் கே. சுகுமாறன் தலைமை வகித்தாா். கிளை நிா்வாகிகள் கோவி. சின்னையன், பாஸ்கரன், வெள்ளிமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல உரிமைகள் பாதுகாப்போா் சங்க மாவட்ட செயலாளா் டி. கணேசன், ஒன்றிய செயலாளா் ரவிச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் சி. மேகநாதன், ஏ. அறிவழகன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராசல்ஜஷ், மகேந்திரன், செந்தில் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில், விவசாயக் கடன் பெறுவதற்கும், பயிா்க் காப்பீடு செய்தற்கு சிட்டா, அடங்கல் வழங்குவதில் முறைகேடு செய்த சம்பந்தப்பட்ட கிராமநிா்வாக அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வட்டாட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT