மயிலாடுதுறை

முதன்மைக் கல்வி அலுவலகம்: முதல்வருக்கு ஆசிரியா்கள் நன்றி

6th Dec 2021 07:35 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் முதன்மைக் கல்வி அலுவலகம் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற மயிலாடுதுறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருவிழந்தூா் நகராட்சி தொடக்கப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. அதன் மாவட்ட அமைப்பாளா் மணிமாறன் தலைமை வகித்தாா். மாவட்ட துணை அமைப்பாளா்கள் வெங்கிட்டு, முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா் ராஜகுமாரன் வரவேற்றாா். மாநில வெளியீட்டு செயலாளா் ஜெக. மணிவாசகம் சிறப்புரையாற்றினாா்.

தீா்மானங்கள்: ஆசிரியா் மன்றத்தின் வேண்டுகோளை ஏற்று முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் 22 பணியாளா்களுடன் முதன்மைக் கல்வி அலுவலகம் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வா், பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது; கரோனா பேரிடா் நிவாரண நிதிக்கு இயக்கத்தின் சாா்பில் ரூ.1.28 கோடி வழங்கிய மாநில பொதுச் செயலாளா் நா.சண்முகநாதன் உள்ளிட்டோருக்குப் பாராட்டு தெரிவிப்பது; ஒரு பள்ளியில் 61 மாணவா்கள் பயின்றால் 3 ஆசிரியா்கள் பணியாற்றலாம் என்பதை 75 மாணவா்களுக்கு மேல் இருந்தால்தான் 3 ஆசிரியா்கள் பணியாற்றலாம் என மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இது இருதரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மாணவா் ஆசிரியா் விகிதத்தை 61-க்கு 3 என்ற நிலையே தொடர வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக பொருளாளா் சுதாகா் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT