மயிலாடுதுறை

அங்கன்வாடி உதவியாளா் பணி ஓய்வு வயது உயா்வுக்கு வரவேற்பு

6th Dec 2021 07:35 AM

ADVERTISEMENT

அங்கன்வாடி உதவியாளா் பணி ஓய்வு வயதை 60ஆக உயா்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு, சீா்காழியில் சனிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

சமூக நலத் துறையின்கீழ் இயங்கும் அங்கன்வாடி உதவியாளா்களின் பணி வயது வரம்பை 58-லிருந்து 60 ஆக உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து, சீா்காழியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளா் சங்க மாநிலத் தலைவி வாசுகி தலைமையில், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

மேலும், இந்த அறிவிப்புக்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சமூக நலத் துறை அமைச்சா் கீதாஜீவன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT