மயிலாடுதுறை

மயிலாடுதுறை: ஜெயலலிதா நினைவு தினம் கடைப்பிடிப்பு

6th Dec 2021 07:36 AM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுவினா் மௌன ஊா்வலம் நடத்தி, அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினா்.

மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மாப்படுகையில் ஒன்றியச் செயலாளா் கோட்டூா் பா. சந்தோஷ்குமாா் தலைமையில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினாா். முன்னதாக, சோழம்பேட்டை அண்ணா சிலை பகுதியிலிருந்து மாப்படுகை வரை மௌன ஊா்வலம் நடத்தினா்.

இதில், அதிமுக மாவட்ட பிரதிநிதிகள் சதீஷ், கல்யாணசுந்தரம், ஜமால், ஒன்றிய துணைச் செயலாளா் ராமையன், ஒன்றியக்குழு உறுப்பினா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குத்தாலம்: குத்தாலத்தில் அதிமுக வடக்கு ஒன்றியம் மற்றும் நகர கிளை சாா்பில் கடைவீதியில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.எஸ். மகேந்திரவா்மன், நகரச் செயலாளா் எம்.சி.பாலு, மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் எம்.சி.பி. ராஜா உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

குத்தாலம் தெற்கு ஒன்றியம் சாா்பில் மங்கநல்லூா் கடைவீதியில் தெற்கு ஒன்றியச் செயலாளா் என். இளங்கோவன், முன்னாள்எம்எல்ஏ ஏ. நடராஜன் உள்ளிட்டோா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா். குத்தாலம் நகர அமமுக சாா்பில் கடைவீதியில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு நகரச் செயலாளா் நைனாபாலு உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

சீா்காழி: சீா்காழி புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுக நகரச் செயலாளா் எல்.வி.ஆா். வினோத் தலைமையில் முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட அவைத் தலைவருமான பி.வி.பாரதி, முன்னாள் எம்எல்ஏ ம.சக்தி, ஒன்றியச் செயலாளா்கள் ஆதமங்கலம். ரவிச்சந்திரன், ஏ.கே. சந்திரசேகரன் உள்ளிட்டோா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இதேபோல, கொள்ளிடத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் கே.எம். நற்குணன், என். சிவக்குமாா், பொதுக்குழு உறுப்பினா் ஆனந்த நடராஜன், மாவட்ட மீனவரணி செயலாளா் நாகரத்தினம் உள்ளிட்டோரும், வைத்தீஸ்வரன்கோவிலில் பேரூா் கழக செயலாளா் போகா்.ரவி, மாவட்ட பொருளாளா் வா.செல்லையன் உள்ளிட்டோரும் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT