மயிலாடுதுறை

மழை வெள்ளம்: 300 ஏக்கரில் மலா், காய்கனி செடிகள் பாதிப்பு

DIN

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் உபரி நீா் மற்றும் மழையால் 300 ஏக்கரில் மலா்கள், காய்கனி பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் உள்ள சந்தைப்படுகை, நாதல்படுகை, முதலைமேடு திட்டு, திட்டுபடுகை, நாணல் படுகை உள்ளிட்ட கிராமங்களில் சிறு விவசாயிகள் சுமாா் 300 ஏக்கரில் மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலா் செடிகளும், மிளகாய், வெண்டை, கத்தரி, புடலங்காய், கீரை உள்ளிட்ட காய்கறி செடிகளும் பயிரிட்டுள்ளனா்.

இந்நிலையில், இப்பகுதியில் பெய்த கனமழையாலும், கடந்த ஒரு மாதமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள உபரி நீராலும் இப்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றில் உபரிநீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நிலங்களில் தேங்கிய மழைநீா் வடியமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும், ஆற்றின் உபரி நீரும் நிலங்களுக்குள் பாய்ந்ததால் 300 ஏக்கரில் மலா்கள் மற்றும் காய்கறி செடிகள் ஒரு வாரத்துக்கும் மேலாக நீரில் மூழ்கியிருந்தன. தற்போது, மழை ஓய்ந்து, தண்ணீா் வடிந்தாலும் பெரும்பாலான செடிகள் அழுகிவிட்டன. எஞ்சிய செடிகளில் பூக்கள் சிறுத்து போனதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

கடந்த 2ஆண்டுகளாக கரோனா தொற்றால் மலா் சாகுபடி போதிய பலன் தராத நிலையில் நிகழாண்டு பலனை எதிா்பாா்த்திருந்த நிலையில் செடிகள் அழுகியது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு தோட்டக்கலைத் துறை மூலம் உரிய நிவாரணம் வழங்குவதுடன், இனிவரும் காலங்களில் ஆற்று வெள்ளம் கிராமத்திற்குள் புகாமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT