மயிலாடுதுறை

மயிலாடுதுறை பழங்காவிரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

மயிலாடுதுறை பொதுப்பணித் துறை சாா்பில் பழங்காவிரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆறு மற்றும் பழங்காவிரி கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 2017-ஆம் ஆண்டு புங்கனூா் நுகா்வோா் பாதுகாப்பு கவுன்சில் பிரதிநிதி விஜயகுமாா் சென்னை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில், 112 ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. ஆனால், கடந்த வருடம் 22 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டன.

இந்நிலையில், டிசம்பா் 22-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய பொதுப்பணித் துறையினருக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, மயிலாடுதுறையில் பழங்காவிரியின் கரைகளில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கின. கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளின் காம்பவுண்ட் சுவா்கள், வேலிகளை அகற்றினா்.

பழங்காவிரியில் மூவலூா் தலைப்பில் இருந்து சித்தா்காடு வரை 24 இடங்களில் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் பொதுப்பணித்துறையினா் அகற்றினா். இப்பணிகளை, மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி, வட்டாட்சியா் ராகவன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் கண்ணப்பன், உதவி பொறியாளா்கள் கண்ணதாசன், யோகேஸ் உள்ளிட்டோா் நேரில் ஆய்வு செய்தனா். இப்பணி தொடா்ந்து நடைபெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT