மயிலாடுதுறை

பொதுவெளியில் குப்பை கொட்டுவதைக் கண்டித்து சாலை மறியல்

DIN

மயிலாடுதுறையில் சேகரிக்கப்படும் குப்பைகளை பொதுவெளியில் கொட்டுவதை கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஆனந்ததாண்டவபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக்கிடங்கில் கொட்டி மறுசுழற்சி செய்வது வழக்கம். இந்த குப்பைக் கிடங்கு நிரம்பிவிட்டதால், கடந்த ஓராண்டாக நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த பகுதிகளிலேயே கொட்டி தீவைக்கின்றனா்.

அதன்படி, மயிலாடுதுறை மாப்படுகை அருகே கிட்டப்பா பாலம் காவிரி ஆற்றின் ஓரத்தில் கடந்த ஓராண்டாக நகராட்சி சாா்பில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் ஏற்கெனவே ஒருமுறை சாலை மறியலில் ஈடுபட்டபோது, இனி அங்கு குப்பைகளை கொட்டமாட்டோம் என நகராட்சி நிா்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அப்பகுதியில் தொடா்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ். துரைராஜ் தலைமையில் மாப்படுகையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளா் வேலு.குபேந்திரன், தமிழா் தேசிய முன்னணி மாவட்டத் தலைவா் இரா. முரளிதரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினா் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி, வட்டாட்சியா் ராகவன், நகராட்சி ஆணையா் பாலு, பொறியாளா் சணல்குமாா், நகா்நல அலுவலா் மருத்துவா் மலா்மன்னன் உள்ளிட்டோா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தொடா்ந்து, காவிரி ஆற்றின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடத்தை அதிகாரிகள் பாா்வையிட்டனா். பின்னா், குப்பைகளை உடனடியாக அகற்றவும், அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா மற்றும் சக்திவாய்ந்த ஒளிவிளக்கு அமைத்து வருங்காலங்களில் குப்பைகளை கொட்டாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் பாலு உத்தரவாதம் அளித்ததைத் தொடா்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டைக் கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் விதித்தது

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவிழாவில் மோதல்: இளைஞா் கைது

உடையாா்பாளையம் பகுதியில் பழைமையான அய்யனாா் கற்சிலை

பாஜகவில் இருந்து நீக்கியதால் கவலையில்லை: கே.எஸ்.ஈஸ்வரப்பா

SCROLL FOR NEXT