மயிலாடுதுறை

தடை செய்யப்பட்ட நெகிழி உற்பத்தி குறித்து தகவல் அளித்தால் வெகுமதி

DIN

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றி தகவல் அளிப்போருக்கு வெகுமதி அளிக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு தமிழக அரசு ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இதன்படி, நெகிழி கோப்பைகள், நெகிழிப் பைகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி குவளைகள், தொ்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழித் தாள்கள், தண்ணீா் பைகள், பாக்கெட்டுகள், நெகிழி உறிஞ்சு குழல்கள் மற்றும் நெகிழி கொடிகள் போன்றவற்றை தயாரிப்பதும், விநியோகிப்பதும், விற்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன.

இத்தடை ஆணையை செயல்படுத்த, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மேலும், ஆய்வுகள் மற்றும் புகாா்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் சட்ட விரோதமாக இத்தகைய நெகிழிப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இவ்வாறு இயங்கும் தொழிற்சாலைகள் குறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

இத்தகவலை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், நாகப்பட்டினம் அலுவலகத்திற்கு கடிதம், மின்னஞ்சல் , தொலைபேசி: (04365 250832), கைப்பேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் (8056049500) மூலம் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிப்பவா்களுக்கு பாராட்டும், வெகுமதியும் அளிக்கப்படும். அவா்களின் ரகசியத்தன்மை கண்டிப்பாக பராமரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT