சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்காக தொண்டாற்றியவா்கள் கபீா் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்காக தொண்டாற்றியவா்களுக்கு 2022-ஆம் ஆண்டுக்கு தமிழக முதல்வரால் கபீா் புரஸ்காா் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களுக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நாகப்பட்டினம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி 04365-253059 என்ற எண்ணிலும் தொடா்புகொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை 3 நகல்களில் டிச.8-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டுப் பிரிவு, நாகப்பட்டினம் 611001 எனும் முகவரிக்கு அனுப்பவேண்டும் என தெரிவித்துள்ளாா்.