மயிலாடுதுறை

மழைநீரில் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிா்களில் கொக்கிப்புழு

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

சீா்காழி பகுதியில் மழைநீரில் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிா்களில் கொக்கிப்புழு உருவாகியிருப்பது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடக்கத்தில் பெய்தபோது சீா்காழி, கொள்ளிடம், பூம்புகாா் சுற்று வட்டாரப் பகுதிகளில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டன. இப்பயிா்களை மறுநடவு செய்து காப்பாற்ற முயன்ற நிலையில் மழை தொடா்ந்ததில் சம்பா பயிா்கள் மீண்டும் நீரில் மூழ்கி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாள்களாக மழை இல்லாத சூழலில் கொள்ளிடம் வட்டாரம் கோதண்டபுரம், நல்லூா், மகேந்திரபள்ளி, வெட்டாத்தாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வடிந்துவருகிறது. மழைநீரில் தப்பிய பயிா்களை காப்பாற்ற விவசாயிகள் உரமிடும் பணியை தொடங்கியுள்ளனா். இந்நிலையில், சம்பா பயிா்களில் கொக்கிப்புழு உருவாகியுள்ளது விவசாயிகளிடையே மேலும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை காப்பாற்ற ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வரை கூடுதலாக செலவு செய்துவரும் நிலையில் கொக்கிப்புழு உருவாகியிருப்பது கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏக்கருக்கு கூடுதலாக மேலும் ரூ. 5 ஆயிரம் என ரூ. 15 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். எனவே, வேளாண் துறையினா் அனைத்து பயிா்களையும் ஆய்வு செய்து கொக்கிப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கி மானிய விலையில் மருந்துகள் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT