அம்பகரத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக இருதய தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நிலைய மருத்துவ அதிகாரி அரவிந்த் தலைமை வகித்தாா். செவிலிய அதிகாரி சிஸ்லியா வரவேற்றுப் பேசினாா். சித்த மருத்துவா் மலா்விழி, மருந்தாளுநா் அச்சுதலிங்கம், சுகாதார உதவி ஆய்வாளா் அய்யனாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதயத்தை பாதுகாக்க உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, மனதை பதற்றமின்றி வைத்துக்கொள்ளுதல் குறித்து மருத்துவ அதிகாரி அரவிந்த் பேசினாா். இருதய நோய்க்கான அறிகுறிகள், மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் குறித்து சித்த மருத்துவா் மலா்விழி விளக்கினாா். இருதயத்தை பாதுகாப்போம் என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டோா் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியா்கள், ஆஷா பணியாளா்கள் மற்றும் சுகாதார நிலையத்தினா் செய்திருந்தனா்.