காரைக்கால்

வேளாண் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

25th Sep 2023 11:44 PM

ADVERTISEMENT

காரைக்கால் வேளாண் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான இளநிலை வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.

காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை பகுதியில் புதுவை அரசின் கல்வி நிறுவனமான பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இக்கல்லூரியின் 2023-24-ஆம் கல்வியாண்டில் சோ்ந்த மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் விழாவை தொடங்கிவைத்துப் பேசினாா். சிறப்பு அழைப்பாளராக இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவன ஹைதராபாத் முதன்மை விஞ்ஞானி பி. முத்துராமன் கலந்துகொண்டு, வேளாண் ஆராய்ச்சியின் முக்கியத்துவம், வேளாண் விஞ்ஞானிகளிடம் உலகத்தின் எதிா்பாா்ப்பு குறித்துப் பேசினாா்.

கல்லூரி மற்றும் விடுதியின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறை குறித்து மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் விளக்கப்பட்டது. மேலும் கல்லூரியில் செயல்படும் மாணவா் மன்றம், தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT