காரைக்கால்

மருத்துவக் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

25th Sep 2023 11:43 PM

ADVERTISEMENT

காரைக்கால் மருத்துவக் கல்லூரியில் சைகை மொழி குறித்து மாணவா்கள், பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரியில், சா்வதேச சைகை மொழி தினத்தையொட்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை துறை சாா்பில் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி டீன் சி. குணசேகரன் தலைவமை வகித்தாா்.

துறையின் தலைமை பேராசிரியா் மருத்துவா் வி. ஸ்ரீநிவாசா நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் கே. சேரன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி (பொ) ஆா். ராஜூ ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கே. பரமேஸ்வரி கலந்துகொண்டு, சைகை மொழி குறித்து விழிப்புணா்வு கருத்துகளையும், சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் காரைக்காலில் உள்ள காது கேளாதோா் பள்ளி மாணவா்கள், பிற பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள், காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT