காரைக்காலில் சனிக்கிழமை (செப். 23) ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலை 10 முதல் பகல் 12 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இதில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை இருதயவியல் மற்றும் இதய நுரையீரல் அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கிறாா்கள். முகாமில் பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்று பயனடையலாம்.