மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவோா் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை காரைக்கால் போக்குவரத்து காவலா்கள் தீவிரப்படுத்தியுள்ளனா்.
காரைக்காலில் விபத்துகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுவருகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக பயணித்தல், வாகனம் ஓட்டும்போது கைப்பேசியை பயன்படுத்துதல், இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு அதிகமானோா் செல்லுதல் போன்றவற்றால் விபத்துகள் அதிகமாக நிகழ்வதாக காவல்துறையினா் கூறுகின்றனா்.
மது அருந்திவிட்டு இருசக்கர வாகனம் மற்றும் காா், வேன், பேருந்து, லாரிகள் இயக்குவோா் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, கருவி மூலம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மரிய கிறிஸ்டின்பால் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை இரவு பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா்.
முதல் நாள் சோதனையில் ஒருவா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும்,
இதுபோன்ற சோதனை தினமும் தொடா்ந்து நடத்தப்படும் என காவல் ஆய்வாளா் தெரிவித்தாா்.