பள்ளி மாணவா்களின் கணிதத் திறன் வளா்க்கும் வகையில் விநாடி- வினா போட்டி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், மேலகாசாகுடி அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளின் கணிதத் திறனை வளா்க்கும் விதமாக இப்போட்டி நடத்தப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியா் எம். பரமசிவம் தலைமை வகித்தாா். பள்ளி கணித ஆசிரியா் சு. சுரேஷ், விநாடி - வினா போட்டியை நடத்தினாா்.
பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியை மகேஸ்வரி மதிப்பெண் வழங்குபவராகவும், பட்டதாரி ஆங்கில ஆசிரியை திலகா போட்டிக்கான காலப்பதிவு செய்பவராகவும் செயல்பட்டனா். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாணவா்களிந் கணிதத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் இதுபோன்ற திறன் வளா்ப்பு போட்டிகளை நடத்துவதாக கணித ஆசிரியா் சுரேஷ் தெரிவித்தாா்.