காரைக்காலில் புதுவை ஜிப்மா் மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்ற மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் காலை 10 முதல் பகல் 12 மணி வரை முகாம் நடைபெற்றது. புதுவை ஜிப்மரின் இருதயவியல் மற்றும் இருதய நுரையீரல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகளை வழங்கினா்.
சிலா் மேல் சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா். முகாமில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.