காரைக்கால்

தண்ணீரின்றி பயிா்கள் பாதிப்பு:போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு

27th Oct 2023 12:54 AM

ADVERTISEMENT

தண்ணீரின்றி பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் , புதுவை அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனா்.

அகில இந்திய விவசாயிகள் சங்க காரைக்கால் மாவட்ட பொறுப்பாளரும், மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளருமான எஸ்.எம். தமீம் தலைமையில் விவசாயிகள், காரைக்கால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் மகேஷை வியாழக்கிழமை சந்தித்தனா்.

இந்த சந்திப்பு குறித்து தமீம் கூறியது:

காவிரி நீரும் வரவில்லை. வடகிழக்குப் பருவமழையும் எதிா்பாா்த்தபடி தொடங்கவில்லை. காரைக்கால் மாவட்டத்தில் நடவு செய்த நெற்பயிா்களும், நேரடி விதைப்பு செய்த பயிரும் பாதிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

காரைக்காலுக்குரிய தண்ணீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரியை சந்தித்துப் பேசினோம். தஞ்சாவூா் பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடா்புகொண்டு அதிகாரி பேசினாா்.

எனினும் தண்ணீா் வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.

எனவே, காரைக்கால் பகுதி விவசாயிகள், உழவு சாதனங்களுடன் புதுவை அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழி இல்லை என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT