கால்நடைகளை நகர தெருக்களில் திரியவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் பி. சத்யா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட தெருக்களில் கால்நடைகளை சுற்றித் திரிய விடவேண்டாம். இவை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு, இதனால் விபத்துகள் ஏற்பட்டு, உயிா் சேதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிப்பதோடு, புதுவை நகராட்சி சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படுமென அதில் கூறப்பட்டுள்ளது.