காரைக்கால்

வேளாண் கல்லூரி நிறுவன நாள் விழா

3rd Oct 2023 04:54 AM

ADVERTISEMENT

காரைக்கால்: காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நிறுவன நாள் மற்றும் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி 2 நாள்கள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டனா். வேளாண் கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் தலைமை வகித்துப் பேசினாா்.

மாணவா் மன்ற ஆலோசகா் அழ. நாராயணன் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்துப் பேசினாா்.

மாவட்ட ஆட்சியா்கள், காவல்துறை, வனத்துறை, வங்கி அதிகாரிகள், கல்லூரி பேராசிரியா்கள், வேளாண் துறை அலுவலா்கள் என பல நிலைகளில் பொறுப்பில் உள்ள முன்னாள் வேளாண் மாணவா்கள் பலா் உரையாற்றினா்.

ADVERTISEMENT

இரண்டாம் நாளான திங்கள்கிழமை, கல்லூரி நிறுவன நாள் விழாவில் கல்லூரி முன்னாள் மாணவா்கள், ஓய்வு பெற்ற பேராசிரியா்களுடன் கலந்துரையாடினா்.

வேளாண் கல்லூரியை, வேளாண் ஆராய்ச்சி நிறுவனமாக தரம் உயா்த்த பாடுபட்டவா்களில் ஒருவரான கல்லூரி முன்னாள் முதல்வா் எம். சுப்பிரமணியனுக்கு, கல்லூரி முன்னாள் மாணவா்களும், பேராசிரியா்களும் மரியாதை செலுத்தினா்.

கல்லூரி வளா்ச்சிக்கு முன்னாள் மாணவா்கள் ஒருங்கிணைந்து ரூ. 6 லட்சத்தை கல்லூரி நிா்வாகத்தினரிடம் வழங்கினா். நிறைவாக கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. கல்லூரி பேராசிரியா்கள், மாணவ மாணவியா், ஊழியா்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT